Home Featured நாடு வெளிநாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிக நிறுத்தம் – சாஹிட் அறிவிப்பு!

வெளிநாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிக நிறுத்தம் – சாஹிட் அறிவிப்பு!

1039
0
SHARE
Ad

zahidகோத்தா சமராஹான் – வங்கதேசத் தொழிலாளர்கள் உட்பட மலேசியாவிற்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வரும் திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“உள்ளூர் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தும் படி அனைத்து நிறுவனங்களையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்று சாஹிட் இன்று அறிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான இரண்டு அடுக்கு லெவி திட்டம் குறித்து அரசாங்கம் மறு ஆய்வு செய்யும் வரை இந்த தற்காலிக நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மலேசியாவில் தற்போது சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.