Home Featured நாடு 1987ஆம் ஆண்டிலேயே இறந்திருப்பேன்: அரசியல் பயணத்தை நினைவுகூரும் பிரதமர் நஜிப்

1987ஆம் ஆண்டிலேயே இறந்திருப்பேன்: அரசியல் பயணத்தை நினைவுகூரும் பிரதமர் நஜிப்

1084
0
SHARE
Ad

கோலாலம்பூர்-கடந்த 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தின்போதே தாம் உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கலாம் என பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார். தமது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை குறித்து அவர் தற்போது நினைவுகூர்ந்து உள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

najib_reuters1976, பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார் பிரதமர் நஜிப். தமது 22ஆவது வயதில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான துன் அப்துல் ரசாக் திடீரென காலமானதைத் தொடர்ந்து, அவரது  பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் நஜிப் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து, தனது அரசியல் பயணத்தில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நஜிப், 1987இல் ஹெலிகாப்டரில் சென்றபோது, இயந்திரக் கோளாறு காரணமாக அது ஜண்டா பாய்க் என்ற இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தை அவர் தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த 40 ஆண்டுகளில் நான் வலுக்கட்டாயமாக பலவற்றைக் கடந்த வர வேண்டியிருந்தது. அல்லா(ஹ்)வின் பாதுகாப்பு இல்லையெனில் நான் இந்நாள் வரை வாழ்ந்திருக்க முடியாது. பல்வேறு தருணங்களில் நான் கொல்லப்பட்டிருக்க (உயிரிழந்திருக்க) வேண்டும். இது பெரும்பாலானோருக்குத் தெரியாது. ஒரு முறை நான் சென்ற ஹெலிகாப்டர் வானில் திடீரென வேகமாக வட்டமடிக்கத் தொடங்கியது. இதையடுத்து ஜண்டா பாய்க்கில் கிட்டத்தட்ட நொறுங்கி விழுந்ததைப் போல் அது தரையிறங்கியது. அந்தச் சம்பவத்தில் நான் இறந்திருக்க வேண்டும். எனினும் நான் பாதுகாப்பாக இருந்தேன். இதற்காக கடவுளுக்கு நன்றி” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.