Home Featured நாடு சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா பாதுகாப்பு நாடு தான் – நஸ்ரி உறுதி!

சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா பாதுகாப்பு நாடு தான் – நஸ்ரி உறுதி!

595
0
SHARE
Ad

nazri_aziz__c221353_111127_970கோலாலம்பூர் – சுற்றுலா மேற்கொள்வதற்கு மலேசியா பாதுகாப்பான நாடு என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மலேசியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் எனவும் அந்நாடு குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ நஸ்ரி, அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், நடப்பவை அனைத்தையும் அறிந்திருப்பதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

“முக்கியமான, சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பகுதிகளில் எத்தகைய நிலைமையையும் சமாளிக்க ஏதுவாக காவல்துறையினரும் ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது பாதுகாப்பு கச்சிதமாக உள்ளது” என்று நஸ்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரங்களுக்கான துறையின் இணையதளத்தில், கோலாலம்பூரில் மேற்கத்தியர்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

“அந்த எச்சரிக்கை செய்தியை நாங்களும் அறிவோம். உலகின் எந்தப் பகுதியும் தீவிரவாத தாக்குதலுக்கு அப்பாற்பட்டதல்ல. வேறு சில அரசாங்கங்களும் பாரிஸ், லண்டன் மற்றும் இதர சில நகரங்கள் தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. தற்போதைய சூழலில் உலகின் எந்தவொரு நகரமும் தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக உள்ளது எனக் கூற இயலாது” என்றார் நஸ்ரி.