Home Featured உலகம் நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் மாயம்!

நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் மாயம்!

866
0
SHARE
Ad

Tara Airகாத்மாண்டு – மேற்கு நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் ஒன்று மாயமானதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

தாரா ஏர் என்ற பெயரில் இயங்கி வரும் அந்த சிறிய இரக விமானம், 18 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் இன்று மேற்கு காத்மாண்டுவைச் சேர்ந்த போகாரா என்ற சுற்றுலா தளத்தில் இருந்து ஜாம்சோமை நோக்கிப் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது.

தற்போது அவ்விமானத்தை தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் களமிறங்கியுள்ளதாக போகாரா விமான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice