ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான அவரது தந்தை சங்கர நாராயணன் (வயது 91) நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவரின் உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது மகன் வீட்டில் வைக்கப்பட்டு, இன்று அடக்கம் செய்யப்படுகின்றது.
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.
அந்த மனு அனுமதிக்கப்பட்டதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து ஆயுதமேந்திய போலீசாரின் பாதுகாப்புடன் நளினி கோட்டூர்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
25 ஆண்டுகளுக்குப் பின் நளினி பரோலில் முதன் முறையாக வெளியே வருவது குறிப்பிடத்தக்கது.