Home இந்தியா பேரறிவாளனின் விடுதலை மனுவை ஏற்கக்கூடாது – மத்திய அரசு பதில் மனு!

பேரறிவாளனின் விடுதலை மனுவை ஏற்கக்கூடாது – மத்திய அரசு பதில் மனு!

991
0
SHARE
Ad

perarivalan - 1புதுடெல்லி – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தான் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அதனை இன்று புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், தண்டனை இரத்து செய்யக் கோரிய பேரறிவாளனின் மனுவை ஏற்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, பேரறிவாளனின் மனுவை வரும் பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கும் உச்சநீதிமன்றம். இந்த விவகாரத்தில் சிபிஐ இன்னும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice