இவ்வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் குழுவில் தாமசும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த 2000-ம் ஆண்டு நளினிக்கும், 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
அதன் பின்னர், குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதனிடையே, இந்த 7 பேரையும், கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்தும் படி, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு முன்னாள் நீதிபதி தாமஸ் கோரிக்கை விடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.