Home நாடு ஆயர் கோ உயிரோடு இருக்கிறாரா? என்பது தெரியாது: விசாரணை அதிகாரி

ஆயர் கோ உயிரோடு இருக்கிறாரா? என்பது தெரியாது: விசாரணை அதிகாரி

912
0
SHARE
Ad

Raymond kohகோலாலம்பூர் – கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட ஆயர் ரேமண்ட் கோ, இன்னும் உயிருடன் தான் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை என இவ்வழக்கை விசாரணை செய்து வரும் குழுவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இவ்விவகாரத்தில் தற்போது தலையிட்டு விசாரணை நடத்தி வரும் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமின் ஆணையர் மாஹ் வெங் வாய், விசாரணை அதிகாரி சுபாரி முகமதுவிடம் கோ உயிரோடு இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்திருக்கும் சுபாரி முகமது, “அது பற்றி தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், ஆயர் ரேமண்ட் கோ இன்னும் மலேசியாவில் தான் இருக்கிறாரா? என்ற கேள்விக்கும், “தெரியவில்லை” எனப் பதிலளித்திருக்கிறார்.