Home நாடு பள்ளிகளில் பாலியல் தொடர்பான கருத்துகளுக்கு கல்வி அமைச்சு செயல்பட வேண்டும்- சுஹாகாம்

பள்ளிகளில் பாலியல் தொடர்பான கருத்துகளுக்கு கல்வி அமைச்சு செயல்பட வேண்டும்- சுஹாகாம்

609
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தவறான மற்றும் பாலியல் செயல்களை குறிப்பிட்டு மாணவிகளை குறி வைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சகம் செயல்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) குழந்தைகள் தலைவர் கூறியுள்ளார்.

பள்ளிகளில் மாதவிடாய் பற்றிய புகார்களைத் தொடர்ந்து ஆசிரியர்களின் நச்சு கலாச்சாரம் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக நூர் அசியா முகமட் அவால் கூறினார்.

“அவர்களின் உரிமைகளுக்காக எழும், மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது இந்த உன்னத தொழிலின் பிம்பத்தை களங்கப்படுத்துகிறது, ” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆண் ஆசிரியர் வகுப்பில் பாலியல் நகைச்சுவைகளை செய்ததாக குற்றம் சாட்டிய மாணவி பிரச்சனை குறித்து நூர் அசியா கருத்து தெரிவித்தார்.

17 வயதான ஐன் ஹுஸ்னிசா சைபுல் நிஜாம், தனது பள்ளியில் உடற்கல்வி மற்றும் சுகாதார வகுப்பின் போது ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் குறித்து விவாதித்தபோது இது நடந்ததாகக் கூறினார்.

கல்விச் சட்டத்தின் கொள்கைகளை நிறைவேற்ற பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் கல்வி முறை ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நூர் அசியா மீண்டும் வலியுறுத்தினார்.