Home One Line P2 சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்

சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்

982
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்தி நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெறவிருக்கும் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் தனது பதவி விலகலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் உட்கட்டமைப்பு முழுவதும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு சோனியாவின் மகன் ராகுல் காந்தி மோசமான பொதுத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். எனினும் அடுத்த ஓராண்டுக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் என சோனியா நிபந்தனை விதித்திருந்தார்.

அதன்படி ஓராண்டுகாலம் தற்போது நிறைவு பெறுகிறது.

எனினும் சோனியா பதவி விலகுகிறார் என்பதையும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு இதன் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதினார் என்பதையும் காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர் மறுத்துள்ளார்.

சோனியா பதவி விலகினால் புதிய தலைவர் ஒருவரை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கும். ராகுல் காந்தி மீண்டும் அந்தப் பதவிக்கு வருவாரா அல்லது தொடர்ந்து ஒதுங்கியிருப்பாரா என்பதும் நாளை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தி கடந்த சில நாட்களாக காங்கிரசின் முக்கிய, மூத்த தலைவர்களிடம் தனது பதவி விலகல் குறித்து பேசியிருக்கிறார் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.