Home One Line P2 பெர்சாத்து கட்சிக்கு புதிய உதவித் தலைவர்கள்

பெர்சாத்து கட்சிக்கு புதிய உதவித் தலைவர்கள்

826
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொகிதின் யாசின் தலைவராக அதிகாரபூர்வமாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவராக ஏற்கனவே பேராக் மந்திரி பெசார்  அகமட் பைசால் அசுமு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மூன்று உதவித் தலைவர்களும் இந்தத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரோனால்ட் கியாண்டி (விவசாயம், விவசாயத் தொழில் அமைச்சர்), முகமட் ராட்சி முகமட் ஜிடின் (கல்வி அமைச்சர்), முகமட் ரபிக் நைசாமொகிதின் (மலாக்கா பாயா ரும்புட் சட்டமன்ற உறுப்பினர்) ஆகிய மூவரும் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்து இந்தத் தேர்வுகளைச் செய்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2019-2022 வரையிலான தவணைக்கு பதவிகளை வகிப்பர்.

பெர்சாத்து கட்சித் தேர்தலில் சில அமைச்சர்களும், பிரமுகர்களும் தோல்வியடைந்தனர்.

சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் முகமட் ரிட்சுவான் முகமட் யூசோப் உதவித் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்தார். இவர் மலாக்கா மாநில பெர்சாத்து கட்சித் தலைவருமாவார்.

பெர்சாத்து கட்சியின் 177 தொகுதிகளைச் சேர்ந்த 23,438 பேராளர்கள் நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.

தேர்தல் முடிவுகளை தேர்தல் குழுத் தலைவர் சைட் ஹாமிட் அல்பார் இன்று அறிவித்தார்.

பெர்சாத்து உச்சமன்றக் குழுவுக்கு 20 வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 163 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

உச்சமன்ற உறுப்பினருக்கான போட்டியில் தோல்வியடைந்தவர்களில் நெகிரி செம்பிலான் பெர்சாத்து தலைவர் செனட்டர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் ஒருவராவார்.

ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசார் ஓஸ்மான் சப்பியானும் உச்சமன்ற உறுப்பினருக்கான போட்டியில் தோல்வியடைந்தார்.

வெற்றி பெற்ற முக்கியத் தலைவர்களில் நடப்பு அமைச்சர் முஸ்தாபா முகமட் ஒருவராவார்.