Home One Line P1 காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி

864
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அவரே மீண்டும் தலைவராகத் தொடர வேண்டும் என்ற நெருக்குதல்கள் இருந்தாலும், அவர் தலைவர் பதவியை ஏற்க கண்டிப்பாக மறுத்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 77 நாட்களாக நீடித்து வந்த காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற குழப்பம் நேற்று சனிக்கிழமை ஒரு முடிவுக்கு வந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகத் தொடர வேண்டும் என அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் நேரு குடும்பத்தின் ஓர் உறுப்பினரே காங்கிரசின் தலைவராகி உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த முடிவு மத்திய செயற்குழுவின் ஏகமனதாக முடிவு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.