Home இந்தியா காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பதவி விலகினார்

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பதவி விலகினார்

803
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் பிற்பகல் 2.30 மணி நிலவரம்) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமையேற்றிருக்கும் ராகுல் காந்தி தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

எனினும், காங்கிரஸ் கட்சியின் படுமோசமான தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதனால் ராகுல் காந்தியின் பதவி விலகலை ஏற்க முடியாது என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)