Home நாடு “அடக்கம், பக்குவமான முறையில் விவகாரங்களை எடுத்து கூறுவது சிறப்பு!”-மஸ்லீ

“அடக்கம், பக்குவமான முறையில் விவகாரங்களை எடுத்து கூறுவது சிறப்பு!”-மஸ்லீ

661
0
SHARE
Ad

புத்ராஜெயா: மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் ஹொவார்டு லீயின் பரிந்துரைகள் நுட்பமாக பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.

கடந்த வாரங்களில் தம்மை சந்தித்தப்போது ஹொவார்டு இந்த விவகாரம் குறித்து பக்குவமான முறையில் எடுத்துக் கூறியதை மஸ்லீ சுட்டிக் காட்டினார். ஹொவார்டின் பரிந்துரைகள் கல்வி அமைச்சினால் ஆராயப்படும் எனவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவையின் இது குறித்து விவாதிக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

அடக்கமான முறையில், பக்குவமான அரசியல் அனுகுமுறையுடன் ஹொடார்டு தம்மிடம் அப்பரிந்துரைகளை முன்வைத்தை மஸ்லீ குறிப்பிட்டார்.