Home கலை உலகம் சுடிர்மானின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்!

சுடிர்மானின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்!

1070
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் தலைசிறந்த பாடகரான சுடிர்மான் அர்ஷாட்டின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் டூடள் ஒன்றை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இது மலேசியர்களுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.  பாடகராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக, காட்சி கலைஞராக, மற்றும்நடிகராகவும் வளம் வந்த அம்மனிதர் “சுடிர்மான்” எனும் பட்டப் பெயருடன் அனைத்து பல்லின மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்று விலங்கினார்.

அவரது வாழ்நாளில் சுமார் 14 ஆல்பங்களை வெளியிட்ட  அவர், கடந்த 1989-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி ஆசியாவின் தலைசிறந்த கலைஞர் எனும் விருதினைப் பெற்றார். இலண்டனில் நடைபெற்ற ஆசியன் போபுலர் மூசிக் அவார்ஸ் போட்டியில் அவர் வெற்றிப் பெற்றதன் வாயிலாக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice