Home இந்தியா பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை

1007
0
SHARE
Ad

சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம். அந்த 7 பேரையும் விடுதலை செய்யும்படி பரிந்துரைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று தீர்ப்பளித்தனர்.

அந்த முடிவைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க இன்று முடிவெடுத்தது.