Home One Line P2 7 பேர் விடுதலை : ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

7 பேர் விடுதலை : ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

643
0
SHARE
Ad

சென்னை : ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களின் விடுதலை குறித்து விவாதிக்க இன்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றது.

விரைவில் தொடங்கவிருக்கும் தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மீதான சட்டமன்றக் கூட்டம் தொடர்பிலும் தமிழக முதல்வர் ஆளுநருக்கு விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

அந்த சந்திப்பு குறித்து தெரிவித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் விரைவில் 7 பேர் விடுதலை குறித்து நல்ல செய்தி வரும் எனக் கூறினார்.