Home One Line P2 ஆஸ்ட்ரோ : ஜனவரி 31 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஜனவரி 31 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

648
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜனவரி 31 வரையிலான ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு :

செவ்வாய், 26 ஜனவரி

சீரியல் பேய் (புதிய அத்தியாயங்கள் – 17-20)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: ‘புன்னகைப் பூ’ கீதா, ஜேம்ஸ் தேவன், சசி குமார், கவிமாறன், ரேவதி, நவீஷா, அக்ஷ்ரா நாயர், கோகுலன், சுரேஷ் & ராஜ் கணேஷ்,

வேதாவும் கீதாவும் தேவாவின் அலுவலகத்திற்குச் செல்கின்றனர். கேஷா கடத்தப்படுகிறார்.

மூன்றாவது கண் (புதிய அத்தியாயங்கள் – 29-31)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ரூபா ராணாவைக் காதலிப்பதை ரக்ஷா வெளிப்படுத்துகிறாள். ஹரிஷைக் காணவில்லை.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 38-40)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தாரணி மாடலிங் போட்டியில் வெற்றிபெற அவரின் உறவினர் ஒருவர் உதவியிருக்களாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

வியாழன், 28 ஜனவரி

பேப்பர் சிக்கன் (Pepper Chicken) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பிபாஷா பாசு & கரண் சிங் குரோவர்

ஒரு பெண் வானொலி அறிவிப்பாளர் இரவில் தன் வீட்டிற்குச் செல்ல ஒரு வாடகை வண்டியில் பயணிக்கிறார். ஆனால், அவ்வண்டி பாதி வழியிலேயே பழுதடைகிறது. உதவிக்கோரி அப்பெண்ணும், வண்டி ஓட்டுநரும் ஒரு பழைய வீட்டிற்குள் நுழைகின்றனர். அவர்கள் நுழையும் போது, வீடு பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருப்பதை உணர்கின்றனர்.

தசாவதாரம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கமல் ஹாசன், அசின் & மல்லிகா ஷெராவத்

ஒரு பயோவெப்பனின் ஆபத்தை உணர்ந்த பிறகு, ஒரு விஞ்ஞானி அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் அதைப் பாதுகாக்கவும் முயற்சி செய்கிறார். அது தற்செயலாக இந்தியாவைச் சென்றடையும் போது,ஒரு சாத்தியப் பேரழிவைத் தடுக்க அவர் போராடுகிறார்.

வெள்ளி, 29 ஜனவரி

கேப்மாரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆதவன், அனிஷா & தாடி பாலாஜி

ஓர் இரவு முழுவதும் ஓர் இரயிலில் அவனுடன் பயணித்த ஒரு பெண்ணை ஒரு பையன் திருமணம் செய்துக்கொள்கிறான்.

சனி, 30 ஜனவரி

பம்பர் டிரா (Bumper Draw) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ராஜ்பால் யாதவ், ஓம்கர் தாஸ் மணிக்புரி (நாதா), ஜாகிர் உசேன் & ருஷாத் ரணா

சுந்தர்லால் மற்றும் பாரூக் ஒரு விசித்திரமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் நட்பு கொள்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் இருவரும் பெஸ்டன்ஜி எனும் ஒரு பழைய பார்சி மனிதரை சந்திக்கின்றனர். அவர்களின் சிக்கல்களின் பட்டியலில் அவரும் சேர்கிறார்.

பிறவி சித்தம் (இறுதி அத்தியாயம் – 8)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201), இரவு 9 மணி மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்:அருசெல்வன் செல்வசாமி

இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைச் சித்தரிக்கும் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படம். பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள், யோகாசனம், சுவாசப் பயிற்சிகள், சைவ உணவு முறைகள் மற்றும் அதன் நன்மைகள், மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலையைக்’ கொண்ட எட்டுத் தளங்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும். அவை யாதெனில், பேராக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் மற்றும் காசிவாசி கண்டைய சுவாமி சமாதி; பினாங்கில் அமைந்துள்ள சித்தர் பழனிசாமி தியான மையம், பிரம்ம ஸ்ரீ சுவாமி சரஹன பவனந்த சமாதி, ஸ்ரீ ரங்கநாத சுவாமி மதாலயம் மற்றும் கந்தசாமி கோயில்; மற்றும் கெடாவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவபித்து குருமாதா (அம்மா) மற்றும் சுவாமி சந்தனந்த சித்தர்.

ஞாயிறு, 31 ஜனவரி

உத்தம வில்லன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கமல் ஹாசன், பூஜா குமார் & ஆண்ட்ரியா

மனோரஞ்சன் என்ற ஒரு சூப்பர் ஸ்டாருக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இருப்பினும், தனது இறுதி விருப்பமாக, அவர் தனது வழிகாட்டியான மார்கதர்சியுடன் இணைந்து ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குகிறார்.

சென்னை எக்ஸ்பிரஸ் (Chennai Express) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: தீபிகா படுகோனே, ஷாருக் கான் & சத்தியராஜ்

மறைந்த தனது தாத்தாவின் அஸ்தியை கரைக்க சென்னை எக்ஸ்பிரஸ் வழியாக ராமேஸ்வரம் நோக்கிச் செல்லும் ஒருவர், குண்டர்களின் முதலாளியின் மகளுக்கு உதவி செய்தபின் சிக்கல்களுக்குள்ளாகிறார்.

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 12)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)செய்து மகிழுங்கள்.

சமையல்காரர்: சாந்தி ராஜ்
தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல் நிபுணர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட நாட்களில், நேரங்களில் பார்க்க இயலாதவர்கள் எப்போதும் ஆஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் (Astro On Demand)  வாயிலாக, தங்களுக்கு உகந்த நேரத்தில் பார்த்து மகிழலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை