Home கலை உலகம் சிவாவுடன் மீண்டும் கூட்டணி ஏன்? – அஜித்தின் அசத்தல் பதில்!

சிவாவுடன் மீண்டும் கூட்டணி ஏன்? – அஜித்தின் அசத்தல் பதில்!

1295
0
SHARE
Ad

Thalaசென்னை – இயக்குநர் சிவாவுடன், ‘விசுவாசம்’ படத்தின் மூலம் நாலாவது முறையாக இணைகிறார் நடிகர் அஜித்.

‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ‘விசுவாசம்’ திரைப்படத்தில் அஜித் வித்தியாசமாக இளமையான தோற்றத்தில் இருப்பார் என முதலில் தகவல்கள் வெளிவந்தன.

#TamilSchoolmychoice

ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியான அஜித்தின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், விவேகம் திரைப்படத்தில் இருந்ததை விட எடை கூடியிருக்கிறார்.

‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தின் வெற்றியையடுத்து, சிவா கூட்டணியில் அஜித் நடித்த ‘விவேகம்’ ரசிகர்கள் மத்தியில் அவ்வளவான வரவேற்பினைப் பெறவில்லை. அப்போதே ரசிகர்கள் இனி சிவாவுடன் இணைய வேண்டாமென கோரிக்கை விடுத்துவந்தனர்.

ஆனால், அஜித் மீண்டும் ஒரு படத்தில் சிவாவுடன் இணைவதாக அறிவித்தார்.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் நடிக்க அஜித் மீண்டும் ஒப்புக் கொண்டது ஏன்? என அஜித் தனது நண்பர்களிடம் கூறியதாக கோலிவுட்டில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

அதாவது, விவேகம் சரியாக ஓடாத நிலையில், அடுத்து ஒரு ஹிட் திரைப்படம் கொடுத்து, ஹிட் இயக்குநர் என்ற பெயரோடு தான் சிவா செல்ல வேண்டும் என்று அஜித் கூறியதாகத் தெரிகிறது.

விவேகம் தோல்வியடைந்தவுடன் அவரை விட்டு விலகிச் செல்வது மனிதாபிமானம் இல்லை என்றும் அஜித் கூறியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.