Home நாடு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு நிதி இல்லை – கிளந்தான் அரசு திட்டவட்டம்!

எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு நிதி இல்லை – கிளந்தான் அரசு திட்டவட்டம்!

1174
0
SHARE
Ad

Che Abdullah Mat Nawiகோத்தா பாரு – மாநில அரசை கவிழ்க்கும் நினைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நிதியில்லை என கிளந்தான் மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

இது கிளந்தான் மாநில பாஸ் செயலாளர் சே அப்துல்லா மாட் நாவி கூறுகையில், “கிளந்தான், சிலாங்கூரில் நிலவும் சூழலில் நிறைய வித்தியாசம் உள்ளது. பாஸ் உறுப்பினராக இருப்பவர் பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் நிர்வாகத்தை தாக்கக் கூடாது. எனவே, கிளந்தானையும், சிலாங்கூரையும் ஒப்பிடுவது சரியாக வராது.”

“கிளந்தானைப் பொறுத்தவரையில், மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைப்பவர்களுக்கு நாங்கள் நடவடிக்கை (நிதியை நிறுத்துவது) மட்டுமே எடுக்கிறோம்” என்று சே அப்துல்லா மாட் நாவி தெரிவித்திருக்கிறார்.