Home Featured உலகம் தாரா ஏர் விமான விபத்து: இதுவரை 19 சடலங்கள் மீட்பு!

தாரா ஏர் விமான விபத்து: இதுவரை 19 சடலங்கள் மீட்பு!

816
0
SHARE
Ad

Tara Airகாத்மாண்டு – மேற்கு நேபாளத்திலுள்ள மலைப்பிரதேசத்தில் நேற்று விழுந்து நொறுங்கிய தாரா ஏர் விமானத்தில் இருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடம் மியாக்டி பகுதியிலுள்ள ஹிமாலய மலைப்பிரதேசத்தில் 4,900 மீட்டர் உயரத்தில் உள்ளதோடு, அங்கு மோசமான வானிலை நிலவி வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

“பலியானவர்களின் சடலங்களைக் கைப்பற்ற நாங்கள் தேடும் பணியில் இறங்கியுள்ளோம். இதுவரை 19 சடலங்களோடு, சில உடல் உறுப்புகளும்  மீட்கப்பட்டுள்ளன” என்று காவல்துறை கண்காணிப்பாளர் சாபி லால் ஜோஷி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice