Home Featured கலையுலகம் ஆஸ்கார் விருதுகள் 2016 – விருதுகள் பட்டியல்! (பாகம்-1)

ஆஸ்கார் விருதுகள் 2016 – விருதுகள் பட்டியல்! (பாகம்-1)

1442
0
SHARE
Ad

oscars_350_032613045419லாஸ் ஏஞ்சல்ஸ் – மலேசிய நேரப்படி இன்று காலை தொடங்கிய 88 வது ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழா விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றது.

முதலாவது விருது சிறந்த அசல் திரைக்கதை (Best Original Screenplay)

ஆஸ்கார் விருதளிப்பில் முதல் விருது அசல் (ஒரிஜினல்) திரைக்கதைக்கு வழங்கப்பட்டது. திரைப்படத்திற்கென பிரத்தியேகமாக எழுதப்படும் திரைக்கதைக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த விருது ‘ஸ்போட்லைட்’ (Spotlight) என்ற படத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த திரைக்கதையை எழுதிய  டோம் மேக்ஆர்த்தி- ஜோஷ் சிங்கர் ஆகிய இருவரும் பெற்றனர்.

சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay)

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை (Best adapted screenplay) ‘பிக் ‌‌ஷோர்ட்’ (Big Short) என்ற படம் பெற்றுள்ளது. சார்ல்ஸ் ராண்டோல்ப்-ராண்டம் மேக்கே இருவரும் பெற்றுள்ளனர்.

சிறந்த துணை நடிகை (Best Supporting Actress)

“டேனிஷ் கேர்ல்” (Danish Girl) என்ற படத்தில் நடித்துள்ள அலிஸ் விகாண்டர் என்ற நடிகை சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.

சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design)

“மேட் மேக்ஸ்-ஃபியூரி ரோட்” (Mad Max-Fury Road)  என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை ஜென்னி பீவன் என்பவர் பெற்றுள்ளார்.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Best Production Design)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை “மேட் மேக்ஸ் -ஃபியூரி ரோட்” (Mad Max-Fury Road) திரைப்படம் பெற்றுள்ளது. இதற்கான விருதை லிசா தோம்சன் மற்றும் கோலின் கிப்சன் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர்.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் (Best Make-up and Hair Styling)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான விருதை “மேட் மேக்ஸ் -ஃபியூரி ரோட்” (Mad Max-Fury Road) என்ற படம் பெற்றுள்ளது. இந்த விருதை லெஸ்லி வெண்டர்வால்ட், எல்கா வார்டிகா மற்றும் டேமியன் மார்ட்டின் ஆகிய மூவரும்  பெற்றுள்ளனர்.

இதுவரை மேட் மேக்ஸ் படம் 3 விருதுகளைப் பெற்று முன்னணியில் இருக்கின்றது.

சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography)

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை “தெ ரெவனென்ட்” (The Revenant) என்ற படம் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவை வழங்கிய இமானுவெல் லுபெஸ்கி இந்த விருதைப் பெறுகின்றார்.

சிறந்த படத் தொகுப்பு (Best Film Editing) 

சிறந்த படத் தொகுப்புக்கான விருதை “மேட் மேக்ஸ் -ஃபியூரி ரோட்” (Mad Max-Fury Road) பெற்றுள்ளது. இதற்கான விருதை ஸ்டீபன் மிரியோன் என்ற பெண்மணி பெற்றுள்ளார். இது மேட் மேக்ஸ் படத்திற்கான நான்காவது விருதாகும்.

இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகையும், தற்போது ஹாலிவுட்டில் பிரபலமாகி வருபவருமான பிரியங்கா சோப்ரா இணைந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒலித் தொகுப்பு (Best Sound Editing)

சிறந்த ஒலித் தொகுப்புக்கான விருதை “மேட் மேக்ஸ் -ஃபியூரி ரோட்” (Mad Max-Fury Road) என்ற படமே பெற்றுள்ளது. இதற்கான விருதை மார்க் மாங்கினி-டேவிட் வைட் இருவரும் இணைந்து பெறுகின்றனர்.

இது மேட் மேக்ஸ் படத்திற்குக் கிடைக்கும் ஐந்தாவது விருதாகும்.

சிறந்த ஒலிக் கலவை (Best Sound Mixing)

சிறந்த ஒலிக் கலவைக்கான விருது “மேட் மேக்ஸ் -ஃபியூரி ரோட்” (Mad Max-Fury Road) என்ற படத்திற்கே கிடைத்துள்ளது.

இதற்கான விருதை கிரிஸ் ஜென்கின்ஸ், கிரெக் ருட்லோஃப், மற்றும் பென் ஓஸ்மோ ஆகிய மூவரும் இணைந்து பெறுகின்றனர்.

(மேலும் விருதுகள் பட்டியல் தொடரும்)