Home Featured நாடு ‘ஒலாபோலா’ மீதான சர்ச்சையைப் பெரிது படுத்தாதீர்கள் – கைரி கருத்து!

‘ஒலாபோலா’ மீதான சர்ச்சையைப் பெரிது படுத்தாதீர்கள் – கைரி கருத்து!

755
0
SHARE
Ad

khairyதாப்பா – ‘ஒலபோலா’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும், முன்னாள் தேசிய கால்பந்து வீரர்களுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனை பெரிதுபடுத்தப்பட்டு விடக்கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கைரி, “படத்தின் தொடக்கத்திலேயே, இந்தப் படம் வரலாற்று நிகழ்வுகள் மூலம் ஈர்க்கப்பட்டது மட்டுமே, முற்றிலும் 100% வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று கூறிவிட்டார்கள்”

“அப்படி இல்லையென்றால், கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தில் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தியிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுக்கு தகுதி பெற்ற மலேசிய காற்பந்துக் குழுவின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ‘ஒலாபோலா’ திரைப்படம்.

அஸ்ட்ரோ ஷா நிறுவனம் தயாரிக்க இத்திரைப்படத்தை சியூ கெங் குவான் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வெளியான 18 நாட்களில் 12 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தில் சில நிகழ்வுகளை மாற்றியமைத்திருப்பதாகக் கூறி முன்னாள் மலேசிய காற்பந்து விளையாட்டாளர்கள், ‘ஒலாபோலா’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.