Home Featured உலகம் அல்பானிய டிவி ஒன்றில் அரை நிர்வாணத்தோடு தோன்றும் செய்தியாளர்கள்!

அல்பானிய டிவி ஒன்றில் அரை நிர்வாணத்தோடு தோன்றும் செய்தியாளர்கள்!

775
0
SHARE
Ad

tv-albania-almost-topless-afp-2802திரானா – பத்திரிக்கை உலகில் நிலவும் கடும் போட்டி காரணமாக அல்பானிய தொலைக்காட்சி ஒன்று, தங்களது நிறுவனத்தின் செய்தி வாசிப்பாளர்களை அரை நிர்வாணத்துடன் செய்தி வாசிக்க வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.

ஜார் டிவி (Zjarr TV) என்ற அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் மேலாடையை மூடாமல் மார்பகங்கள் தெரியும்படியாக அமர்ந்து செய்தி வாசித்து வருகின்றனர்.

“அல்பானியாவில் அரசியல் குறுக்கீடுகள் காரணமாக செய்திகள் யாவும் கட்டுப்பாடுகளுடன் தான் வெளியிடப்படுகின்றன. இதனால் பார்வையாளர்களுக்கு ஒரு நடுநிலையான செய்தி கொடுக்க இது போன்ற உத்திகளை (அரைநிர்வாணம்) கையாள்கிறோம்” என்று ஜார் தொலைக்காட்சியின் உரிமையாளர் இஸ்மெட் ட்ரிஷ்டி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “நாங்கள் செக்ஸ் விற்பனை செய்யவில்லை மாறாக அந்தப் பாணியில் செய்தி தயாரிக்கிறோம். இதனால் நல்ல விளம்பரம் கிடைக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.