Home Featured கலையுலகம் ஆஸ்கார் 2016: சிவப்புக் கம்பள வரவேற்பில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் அழகு பவனி! (தொகுப்பு-1)

ஆஸ்கார் 2016: சிவப்புக் கம்பள வரவேற்பில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் அழகு பவனி! (தொகுப்பு-1)

693
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – ஆஸ்கார் என்றாலே, அதன் விருதளிப்புக்கு முன்னால், ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள், அழகு நடிகைகள் அசத்தும் ஆடைகளில் சிவப்புக் கம்பள வரவேற்பில் அணிவகுத்து வருவதுதான் சிறப்பம்சம்.

ஒரு நிமிடம் தொலைக்காட்சியில் பார்க்கும் இரசிகர்களின் மூச்சை நிறுத்தி வைக்கும் வண்ணம், கவர்ச்சியா – ஆபாசமா – அல்லது, நவீன ஆடையலங்காரத்தின் உச்ச கட்டமா என அனைவரையும் வாய் பிளந்து நிற்க வைப்பதுதான் ஹாலிவுட் நட்சத்திரங்களின் உன்னத நோக்கம்.

அந்த வகையில், நேற்று நடந்த 88வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் அனைவரையும் கவர்ந்த, அசத்திய ஹாலிவுட் நட்சத்திரங்களின் வண்ணமயமான படத் தொகுப்பு இது:

#TamilSchoolmychoice

Oscar 2016-Priyanka Chopra

நமது ஊர் பிரியங்கா சோப்ராவிலிருந்து முதலில் ஆரம்பிப்போமா? தற்போது பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்குப் பறந்து சென்றிருக்கும் கிளி பிரியங்கா சோப்ரா.

அங்கு “குவாண்டிகோ” என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கும் பிரியங்காவுக்கு இந்த ஆண்டு ஆஸ்காரில் கிடைத்திருக்கும் கௌரவம், விருது ஒன்றை வழங்குவதுதான். இந்த முறை சிறந்த படத் தொகுப்புக்கான விருதை இணைந்து வழங்கியது பிரியங்கா சோப்ராதான்!

Oscar 2016-Charlize Theron

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சார்லிஸ் தெரோன் (Charlize Theron)..

Oscar 2016-Charlotte Riley-Tom Hardy

சார்லோட் ரிலி-டோம் ஹார்டி ஜோடி (Charlotte Riley-Tom Hardy)

Oscar 2016-Jennifer Garner

ஒய்யார நடை நடந்து இரசிகர்களைக் கொள்ளை கொண்ட ஜெனிஃபர் கார்னர் (Jennifer Garner)

Oscar 2016-Jennifer Lawrence

வளர்ந்து வரும் இளம் நடிகைகளுள் ஒருவரான ஜென்னிஃபர் லாரன்ஸ் (Jennifer Lawrence)

Oscar 2016-Julian Moore

வயதானாலும் கவர்ச்சியில் குறைவில்லாத ஹாலிவுட் நட்சத்திரம் ஜூலியன் மூர் (Julian Moore) தனது துணையுடன்…

Oscar 2016-Olivia Wilde

சிவப்புக் கம்பள வரவேற்பின்போதும், பரிசளிக்க மேடையேறிய போதும், தனது அசத்தலான, ஆடையால் அனைவரையும் ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்த ஒலிவியா வைல்ட்…

Oscar 2016-Rachel McAdams

சிவப்புக் கம்பள விரிப்பில் பச்சை வண்ண உடையில் ரேச்சல் மேக்ஆடம்ஸ்…

Oscar-Leonardo DeCairo-Kate Winslet

ஹாலிவுட் சினிமா இரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத இணை – டைட்டானிக் படத்தில் முதன் முதலாக இணைந்த லியோனார்டோ டி காப்பிரோ, கேட் வின்ஸ்லெட் இணைந்து காட்சி தந்தபோது – ஐந்து முறை முன்மொழியப்பட்டும் பெற முடியாத சிறந்த நடிகருக்கான விருதை இந்த முறை லியோர்னாடோ பெற்றார்.

-செல்லியல் தொகுப்பு