Home நாடு வேதமூர்த்திக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் இணைந்தார் சீன வாலிபர்

வேதமூர்த்திக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் இணைந்தார் சீன வாலிபர்

566
0
SHARE
Ad

chin

ரவாங், மார்ச்.15 – ரவாங், கம்போங் பெங்காலியிலுள்ள அருள்மிகு அகோர வீர பத்ர-சங்கிலிக் கருப்பர் ஆலயத்தில் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்திய நிலையில் வேதமூர்த்தி இன்று 4 ஆவது நாளாக  உண்ணாவிரதப்  போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில்,நேற்று காலை 9 மணியளவில் வேதமூர்த்திக்கு ஆதரவாக ஜோகூர் மாநில மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த நியாம் கீ ஹான் என்ற இளம் சீன வாலிபர் ஒருவர் அவருடன்  உண்ணாவிரதத்தில் இணைந்தார்.

அதுகுறித்து  நியாம் கீ ஹான் கூறுகையில், வேதமூர்த்திக்கு ஆதரவு தருவதோடு மட்டுமல்லாமல் ஒதுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களுக்காகத் தொடர்ந்து போராடிவரும் ஹிண்ட்ராப் இயக்கத்தை ஆதரிக்கவும், தான் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், ஒதுக்கப்பட்ட இந்திய சமுதாயத்தினரின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை தேசிய முன்னணி அரசுக்கும், மக்கள் கூட்டணி அரசுக்கும் அழுத்தமாகப் புரியவைப்பதே வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.