Home இந்தியா புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கர் தேர்வு – கருணாநிதி மகிழ்ச்சி

புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கர் தேர்வு – கருணாநிதி மகிழ்ச்சி

600
0
SHARE
Ad

karunaathi-smile

 சென்னை, மார்ச்.15- புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கரான ஜார்ஜ் மரியோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் போப் முதலாவதாக தேர்வு செய்யப்படும் தென் அமெரிக்கர் என்பதும், அவர் நீண்ட நெடுங்காலமாக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதும் தனக்கென சொந்தமாக எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து வாகனத்தையே பயன்படுத்தியும், தனக்கு தேவையான உணவை தானே சமைத்து உண்டு வருகிறார் என்பதும் அவரது தந்தையார் ஒரு ரயில்வே தொழிலாளி என்பதும் நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த நேரத்தில் அடையும் மகிழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.