கோலாலம்பூர் – பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 820,000- த்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள், நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளார்கள் என துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இதுவரையில், மலேசியக் குடிநுழைவு இலாகா 827,921 மலேசியர்களை நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்துள்ளது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
மொத்தம், 827,921 பேரில், 200, 727 பேர் திவாலானவர்கள், 118,892 பேர் கல்விக்கடன் பெற்று செலுத்தத் தவறியவர்கள், 520 பேர் பாதுகாப்புக் குற்றங்களுக்காகவும், 507, 782 பேர் மற்ற குற்றங்களுக்காகவும் நாட்டைவிட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
http://sspi2.imi.gov.my/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி உங்களுக்குத் தடை ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா? என்ற நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.