Home Featured இந்தியா பிரதமர் மோடிக்கு லண்டனில் மெழுகுச் சிலை!

பிரதமர் மோடிக்கு லண்டனில் மெழுகுச் சிலை!

648
0
SHARE
Ad

லண்டன் – லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள பிரபல உலக தலைவர்களின் மெழுகுச்சிலைகள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இடம்பிடிக்க உள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பராக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா உள்ளிட்ட பல முக்கிய உலக தலைவர்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகுச் சிலை இடம்பெறுவது குறித்து அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்“ பிரதமர் மோடி உலக அரசியலில் முக்கிய இடம் வகிக்கிறார். 2015-ஆம் ஆண்டில் டைம் இதழ் வெளியிட்ட முன்னனி சிறந்த 100 மனிதர்களில் மோடி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

modiமோடியின் மெழுகுச் சிலை குர்தாவுடன் கோட் அணிந்தபடி வடிவமைக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளைகளிலும் மோடியின் சிலை இடம்பெறவுள்ளது.

பிரதமர் மோடியின் மெழுகுச் சிலை ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. சிலை வடிவமைப்பு கலைஞர்கள் டெல்லி வந்து பிரதமர் மோடியை அளவெடுத்தனர்.