Home Featured இந்தியா ஐ.பி.எல். பெங்களூரு அணியில் இருந்து விஜய் மல்லைய்யா ராஜினாமா!

ஐ.பி.எல். பெங்களூரு அணியில் இருந்து விஜய் மல்லைய்யா ராஜினாமா!

618
0
SHARE
Ad

vijay_mallya_2778309fபுதுடெல்லி – ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

வங்கி கடன் பாக்கி பிரச்சினையில் சிக்கியதால் இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லைய்யா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இதனை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி தெரிவித்துள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பொறுப்பாளராக ரஸ்செல் ஆடம்ஸ் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ரஸ்செல் ஆடம்ஸ் இதுவரை பெங்களூரு அணிக்கு துணை தலைவராக செயல்பட்டு வந்தார். பெங்களூரு அணியின் உரிமையாளர் அமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் இயக்குனராக அவரது மகன் சித்தார்த் பொறுப்பு ஏற்கும் வரை விஜய் மல்லைய்யா கவுரவ தலைமை ஆலோசகராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.