Home Featured தமிழ் நாடு கூட்டணி குறித்து பேசுவதாகக் கூறி ஸ்டாலின் சந்திப்பை ரத்து செய்த கார்த்திக்!

கூட்டணி குறித்து பேசுவதாகக் கூறி ஸ்டாலின் சந்திப்பை ரத்து செய்த கார்த்திக்!

620
0
SHARE
Ad

karthik+with+stalinசென்னை – கூட்டணி தொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து பேசவிருந்த நடிகர் கார்த்திக்,  நேற்று அந்த சந்திப்பை ரத்து செய்திருப்பது திமுக தரப்பை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. திமுக பொதுச்செயலாளர் ஸ்டாலினை கோபப்படுத்திவிட்டார்.

கார்த்திக், தி.மு.க பொருளாளர் ஸ்டாலினை நேற்று சந்தித்து, அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, திமுக கூட்டணியில் ஓரிரு சீட்களை பெறுவது குறித்து பேசுவதாக இருந்தது.

ஆனால் குறிப்பிட்ட நேரம் வரை   ஸ்டாலின் காத்திருந்தும், அவரை கார்த்திக் சந்திக்கும் அறிகுறிகள் தென்படவில்லை. ஸ்டாலினை சந்திக்காமல் கார்த்திக் சென்றது பின்னர்தான் தெரிந்தது. இதனால் கோபமாகி விட்டாராம், ஸ்டாலின்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினை சந்தித்து கூட்ணி தொடர்பாக பேசவிருப்பதாக வெளியான தகவலால் ஆளும்கட்சி அதிர்ப்தியாக இருப்பதால்,  அதன் எதிரொலியாக கார்த்திக் இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.