Home Featured தமிழ் நாடு கோவை மருத்துவமனையில் ஓ.பன்னீர் செல்வம் தாயார் அனுமதி!

கோவை மருத்துவமனையில் ஓ.பன்னீர் செல்வம் தாயார் அனுமதி!

962
0
SHARE
Ad

paneerselvamகோவை –  தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் (82) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை அழைத்து வரப்பட்டார்.

ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயாரை ஓ.பன்னீர்செல்வம் பார்த்தார். பின்னர், மருத்துவருடன் பேசிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், ‘வயிற்று வலி மற்றும் பித்தப்பை கல் தொந்தரவு காரணமாக பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை. அறுவை சிகிச்சை தேவையில்லையெனில் வரும் திங்கட்கிழமை அவர் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றனர்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வருகை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக, ஓ.பன்னீர்செல்வம் கோவை வரும்போது உள்ளூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் திரண்டு சென்று வரவேற்பு அளிப்பது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்தபோது அவரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் யாரும் செல்லவில்லை.