Home Featured நாடு கடும் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

கடும் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

657
0
SHARE
Ad

heatகோலாலம்பூர் – ஜோகூரில் காவல்துறைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் கடும் வெயில் காரணமாக நேற்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டில் நிலவி வரும் வெப்பநிலை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

வெயில் பாதிப்பில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மதிய நேரங்களில் வெளியே செல்வதைக் குறித்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மலேசிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காவல்துறை, இராணுவம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆகியவை தங்களது வீரர்களுக்கு வெளியிடங்களில் பயிற்சி அளிப்பதை தற்காலிகமாகக் குறைத்துக் கொள்ளும் படியும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஏழு நாட்களுக்கு மேல் நாட்டின் வெப்பநிலையின் அளவு 40 டிகிரி செல்சியசாகப் பதிவாகும் பட்சத்தில், அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதி வரையில் கடும் வெப்பநிலை நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.