Home Featured இந்தியா மேற்குவங்க சட்டசபைத் தேர்தல்: 194 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

மேற்குவங்க சட்டசபைத் தேர்தல்: 194 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

796
0
SHARE
Ad

bjp-flag324-600கொல்கத்தா – மேற்குவங்க மாநிலத்தில் வரும்சட்டசபைத் தேர்தல் போட்டியில் முதற்கட்டமாக 194 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க., அறிவித்துள்ளது. இதில் பா.ஜ.க., முன்னாள் தலைவர் ராகுல் சின்ஹா மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான ரூபா கங்குலி ஆகியோர் பெயர் இந்த பட்டியலில் முக்கியமானவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க., தலைவர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த பட்டியல் இளைஞர்களுக்கும், 26 பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பா.ஜ.க., 246 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.  சில சிக்கல்கள் காரணமாக கேரள தேர்தலுக்கு பா.ஜ.க., வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.