Home Featured நாடு டான்ஸ்ரீ சுப்ரமணியம் சொற்போர் – அமைச்சர் சுப்ரா இன்று தொடக்கி வைக்கின்றார்!

டான்ஸ்ரீ சுப்ரமணியம் சொற்போர் – அமைச்சர் சுப்ரா இன்று தொடக்கி வைக்கின்றார்!

860
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுமை நிகழ்ச்சியாக நாடு முழுவதிலும் உள்ள சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களை அடையாளம் காணும் களமாக டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் சொற்போர் நடைபெறவிருக்கின்றது.

Subramaniam-Tan Sri-devate-banner

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தொடக்கி வைக்கின்றார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துறையில் செடிக் மையத்தின் ஆதரவில் நடைபெறும் சொற்போர் நிகழ்ச்சியை மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகமும், ஓசை அறவாரியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.