Home Featured இந்தியா 18 நாள் கடையடைப்புப் போராட்டத்தை நகைக் கடையாளர்கள் திரும்பப் பெற்றனர்!

18 நாள் கடையடைப்புப் போராட்டத்தை நகைக் கடையாளர்கள் திரும்பப் பெற்றனர்!

787
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியா முழுவதும் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வந்த நகைக் கடை உரிமையாளர்கள் தங்களின் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அரசாங்க அதிகாரிகள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகின்றது.

wh3-jewelleryசனிக்கிழமை நடைபெற்ற 8 மணி நேர கூட்டத்திற்குப் பின்னர் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழுவில் நகைக்கடைத் தொழிலைப் பிரதிநிதித்து மூவர், ஒரு சட்ட வல்லுநர், மத்திய கலால் மற்றும் சுங்க வரி இலாகாவின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.

#TamilSchoolmychoice

நகைக் கடை உரிமையாளர்கள் வழங்கும் மதிப்பீட்டை இனி வரி இலாகாவினர் எதிர்க்க மாட்டார்கள் என்பதோடு, உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, தெரியப்படுத்தப்படும் வரை, வரி இலாகாவினர் கடைகளுக்கும், உற்பத்திக் கூடங்களுக்கும் சோதனை நடவடிக்கைகளுக்காக வருகை தரமாட்டார்கள்.

இருப்பினும், நகைக்கடை உரிமையாளர்களின் பட்டியல் பதிவு செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று நிறைவு பெறும்.