Home Featured நாடு அந்த விலைக்கு ஒப்புக்கொண்டு தான் குவான் எங்கிற்கு விற்றேன் – வீடு விற்றவர் அறிவிப்பு!

அந்த விலைக்கு ஒப்புக்கொண்டு தான் குவான் எங்கிற்கு விற்றேன் – வீடு விற்றவர் அறிவிப்பு!

777
0
SHARE
Ad

Bagan MP Lim Guan Engஜார்ஜ் டவுன் – கடந்த 2014-ம் ஆண்டு, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஒப்புதலுடன் தான் பின்ஹார்ன் சாலையில் உள்ள அந்த இல்லம், 2.8 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது என்று அந்த வீட்டை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு விற்பனை செய்த பாங் லி கூன் இன்று வெளியிட்ட சத்தியப் பிரமாணத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டின் விலை 2.8 மில்லியனுக்கு கொடுப்பதாக ஏற்றுக் கொண்ட பிறகே, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை கொம்டாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாங் லி கூன் சார்பில் மாநில செயற்குழு ஊராட்சி உறுப்பினர் பீபூன் போ அந்த சத்தியப் பிரமாணத்தை செய்தியாளர்கள் முன் வாசித்தார்.

#TamilSchoolmychoice

அந்த சத்தியப் பிரமாணத்தை ஏன் நீங்கள் வாசிக்கின்றீர்கள் என பீபூனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தான் பாங்கின் தூரத்து உறவினர் என்றும், பாங் சங்கத்தின் ஆலோசகர் என்றும் தெரிவித்துள்ளார்.

cab615018670d2892ccc6ea64d9476eeசுமார் 6 மில்லியனுக்கும் மேல் மதிப்புடைய அந்த வீட்டை, லிம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 2.8 மில்லியனுக்கு வாங்கி விட்டதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சாபுடின் யாஹாயா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.