ஜெர்மனி – யுஸ்ரா மர்த்தினியும் அவரது சகோதரி சாராவும் இஸ்தான்புல்லில் இருந்து கிரேக்க தீவு லாஸ்பாஸிற்கு அகதிகளாக தப்பித்து வந்தனர். ஏழு பேரை மட்டுமே சுமக்கும் வலிமை பெற்ற படகில், 20 பேர் கடலில் தப்பி சென்றதால் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த இரு சகோதரிகளும் நீந்தி ஜெர்மனியை அடைந்தனர்.
தப்போது 2020-இல் ரையோ டி ஜனேரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில், பல்வேறு நாட்டைச் சார்ந்த திறமை மிக்க அகதிகள் போட்டியிட ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் இம்முறை கலந்து கொள்ளவிருக்கும் பல்வேறு துறையைச் சார்ந்த 43 போட்டியார்களில், 18 வயதே நிரம்பியுள்ள யுஸ்ராவும் போடியிட இருக்கிறார். இதற்கு முன் அகதிகளை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிப்பது இல்லை.
காரணம் அவர்கள் எந்த நாட்டையும் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான். எனவே, இம்முறை ஒலிம்பிக் அமைப்பு எடுத்துள்ள முடிவில், அகதிகள் அனைவரும் ஒலிம்பிக் கொடியை உபயோகிப்பர். இது குறித்து மர்த்தினி கூறுகையில்,” அனைத்து அகதிகளும் என்னைக் கண்டு பெருமைப்பட வேண்டும்.
தாய் நாடு சொந்தமில்லாத நிலையிலும், துன்பத்தில் துவண்டாலும் ஒரு மனிதன் வாழ்வில் சாதிக்க முடியும் என்பதுதான் உண்மை. அதை நான் உலகிற்கு காட்டுவேன். என் மனம் தாய்நாட்டை மிகவும் தேடுகிறது. என்றாவது ஒரு நாள் மீண்டும் செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.