Home Featured இந்தியா தமிழக தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு – பிரகாஷ் ஜவடேகர்!

தமிழக தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு – பிரகாஷ் ஜவடேகர்!

478
0
SHARE
Ad

Prakash-JavadekarInterviewபுதுடெல்லி – தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களின் முதல் பட்டியல் நாளை வெளியிடப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மத்திய அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும்.

இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளன. அந்த கட்சிகளுடன் சேர்ந்து நாங்கள் தேர்தலை சந்திப்போம். மக்கள் பிரதமரையும், பாரதீய ஜனதா கட்சியையும் நேசிக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு கடந்த 50 ஆண்டுகளாக செய்ததை விட மேலும் சிறந்த வகையில் பாரதீய ஜனதா மக்களுக்கு தொண்டாற்றும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், செயல்பாட்டில் நம்பிக்கை கொண்ட தமிழக மக்கள் கண்டிப்பாக பாரதீய ஜனதாவை இந்த தேர்தலில் பெருவாரியாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

எங்கள் கட்சியின் தமிழக சட்டசபை தேர்தல் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த குழு வேட்பாளர்களை முடிவு செய்யும். பின்னர் இந்த குழுவினர் டெல்லி வந்து எங்களை நாளை சந்திப்பார்கள். அன்று பாரதீய ஜனதா வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்படும் என பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.