Home Featured தமிழ் நாடு பாஜக யாருடன் கூட்டணி? மீண்டும் சென்னையில் பிரகாஷ் ஜவடேகர்!

பாஜக யாருடன் கூட்டணி? மீண்டும் சென்னையில் பிரகாஷ் ஜவடேகர்!

663
0
SHARE
Ad

சென்னை – தமிழகத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் இன்னும் பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

Prakash Jawadekar-BJPகடந்த வாரம் சென்னை வந்த பாஜகவின் தமிழகத் தேர்தலுக்கான பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் (படம்) இன்று மீண்டும் சென்னை வந்துள்ளார்.

விஜயகாந்தைச் சந்தித்துச் சென்றாலும் இன்னும் விஜயகாந்தும் யாருக்கும் பிடி கொடுக்காமல் முரண்டு பிடித்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தொலைக்காட்சிகளுக்கு விடுத்த அறிக்கையில், தேமுதிக இன்னும் யாருடனும் கூட்டணி பேரம் பேசவில்லை என்றும், திமுகவுடன் 59 தொகுதிகள் பங்கீட்டிற்கு ஒப்புக் கொண்டதாக, வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.

Vijayakanth-Prakashவிஜயகாந்துடன்  கடந்த வாரம் சந்திப்பு நடத்திய பிரகாஷ் ஜவடேகர்-தமிழிசை சௌந்தரராஜன்….

பாஜகவுடனான கூட்டணி பற்றி கடந்த வாரம் விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்றும் கூட்டணி பற்றி முடிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் இன்று மீண்டும் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்திருக்கின்றார்.