Home Featured நாடு எஸ்பிஎம் தேர்வு: 2,336 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்தனர்!

எஸ்பிஎம் தேர்வு: 2,336 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்தனர்!

800
0
SHARE
Ad

Kamalanathan-Featureகோலாலம்பூர் – கடந்த 2015-ம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த 440,682 மாணவர்களில் 30,999 பேர் இந்தியர்களாவர். இவர்களில் 799 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- எடுத்துள்ளனர். மொத்தம் 19 இந்திய மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ எடுத்து சாதனை புரிந்துள்ளனர் என கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் அயராத உழைப்பும், ஆசிரியர்களின் அளவற்ற தியாகங்களும், பெற்றோர்களின் அரவணைப்பும் இந்த மாணவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ப.கமலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மொழியும் – தமிழ் இலக்கியமும்

#TamilSchoolmychoice

2015-ம் ஆண்டின் எஸ்.பி.எம் தேர்வில் 8,300 பேர் தமிழ்மொழித் தேர்வுக்கு அமர்ந்த வேளையில்,  2,336 மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை ஒரு தேர்வுப் பாடமாக எடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2015-ல் எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தமிழ்மொழிப்பாடம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதோடு தமிழ்மொழி இலக்கியத்தில் நமது மாணவர்கள் 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2% கூடுதலாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என கல்வித் துணையமைச்சர் கமலநாதன் தெரிவித்தார்.

“மேற்கல்வியைத் தொடர இந்த எஸ்.பி.எம் தேர்வு ஒரு படிக் கல். ஆகவே சிறப்பாகத் தேறாத மாணவர்கள் மனம் தளராமல், தங்களுக்குப் பிடித்தத் துறையில் கல்வியைத் தொடர வேண்டும். அதோடு பெற்றோர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர சிறப்பாகத் தேறிய மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி அவர்களின் மனதைப் புண்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும். அதோடு மிகச் சரியான மேற்கல்வியைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். முடிந்த வரையில் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் மேற்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் தமது அலுவலகம் வழங்கும்” என்றும் கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்தார்.