Home இந்தியா எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்

204
0
SHARE
Ad
இந்திரா சௌந்தரராஜன்

சென்னை : 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டுத் தொலைக் காட்சி அலைவரிசையிலும், நம் நாட்டில் ஆஸ்ட்ரோ அலைவரிசையிலும் மிரட்டிய மர்மத் தொடர் “மர்மதேசம்”, “விடாது கருப்பு” போன்ற தொடர்களாகும். இந்தத் தொடர்களை எழுதிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) காலமானார்.

தனது குளியலறையில் வழுக்கி விழுந்து அதன் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 65.

இந்திரா சௌந்தரராஜன் மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்தார் என பிரபல தமிழறிஞர் சாலமன் பாப்பையா புகழாரம் சூட்டினார். சித்தர்கள், ஆன்மீகம் என தமிழ் எழுத்தாளர்கள் தொடாத முனைகளில் இந்திரா சௌந்தரராஜன்  தன் படைப்புகளை உருவாக்கினார்.

#TamilSchoolmychoice

சிறுகதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், கட்டுரகைள் என பலதரப்பட்ட எழுத்தோவியங்களை வழங்கியவர் இந்திரா சௌந்தரராஜன்.