Home Featured இந்தியா டி 20 கிரிக்கெட் – வீராட் கோலி அதிரடியால் இந்தியா 6 விக்கெட்டுகளில் வெற்றி!

டி 20 கிரிக்கெட் – வீராட் கோலி அதிரடியால் இந்தியா 6 விக்கெட்டுகளில் வெற்றி!

558
0
SHARE
Ad

Cricket - ICC-T20-World-Cup-2016மொஹாலி -இந்தியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில், நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இது அமைந்தது.

வீராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது

முதல் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களை முடித்தபோது 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியா 161 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு களத்தில் இறங்கியது.

#TamilSchoolmychoice

அடுத்து விளையாடிய இந்தியா 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 161 ஓட்டங்களை எடுத்ததைத் தொடர்ந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.