Home Featured நாடு வாடகைக் கார் ஓட்டுநர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் – கோலாலம்பூரில் கடும் வாகன நெரிசல்!

வாடகைக் கார் ஓட்டுநர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் – கோலாலம்பூரில் கடும் வாகன நெரிசல்!

629
0
SHARE
Ad

Taxi drivers (2)கோலாலம்பூர் – கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் இன்று செவ்வாய்கிழமை காலை வாடகைக்கார் ஓட்டுநர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதி முழுவதும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஜாலான் புக்கிட் பிந்தாங்கிலுள்ள பெவிலியன் வணிக மையத்தின் முன்னே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அபெர் மற்றும் கிராப் கார் (Uber and GrabCar) ஆகியவற்றுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அங்கு வந்த காவல்துறை, மலேசிய வாடகைக் கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் கமாருடின் மொகமட் ஹுசைன் உட்பட பல ஓட்டுநர்களைக் கைது செய்துள்ளது.

இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை தரை பொதுப்போக்குவரத்து ஆணையம் வெளியிடும் எனக் கூறப்படுகின்றது.