Home Featured தமிழ் நாடு திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: இளங்கோவன் டெல்லி பயணம்!

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: இளங்கோவன் டெல்லி பயணம்!

494
0
SHARE
Ad

elangovanசென்னை – திமுக – காங்கிரஸ் தொகுதி இழுபறி காரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  டெல்லிக்கு திடீரென சென்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்த திமுக பல்வேறு வியூகங்களை எடுத்து, கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லி சென்றுள்ளர். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இடையே ஆலோசனை நடத்த உள்ளார். இதனையடுத்து, தொகுதி இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice