Home Featured இந்தியா நேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு!

நேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு!

586
0
SHARE
Ad

Subhas-Chandra-Boseபுதுடெல்லி – இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, நாட்டின் விடுதலைக்காக மிகப்பெரிய படையை உருவாக்கி உலக புகழ்பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1948–ஆம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே அவர் விமான விபத்துக்கு பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதால் அவரைப் பற்றிய உண்மை தகவல் என்ன? என்பதில் மர்மம் நீடிக்கிறது.

நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து ஆவணங்களையும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நேதாஜியின் 119-ஆவது பிறந்த நாளான 23-1-2016 அன்று அவர் தொடர்பான 100 ரகசிய கோப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அந்த கோப்புகளில் இதுவரை பொதுவெளியில் தெரியாமல் இருந்த பல அரிய தகவல்கள் காணப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா இன்று நேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்களை வெளியிட்டார். இந்த 50 ஆவணங்களில் 10 பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், 10 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்தும், மீதமுள்ள 30 ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்தும் பெறப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.