Home Photo News சிங்கை இந்திய தேசிய இராணுவ நினைவுச் சின்னத்திற்கு ராகுல் காந்தி வருகை (படக் காட்சிகள்)

சிங்கை இந்திய தேசிய இராணுவ நினைவுச் சின்னத்திற்கு ராகுல் காந்தி வருகை (படக் காட்சிகள்)

1692
0
SHARE
Ad
நேதாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் ராகுல் காந்தி

சிங்கப்பூர் – சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்ட இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு அமைந்திருக்கும் இந்திய தேசிய இராணுவத்தின் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் மையத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதோடு, அங்கிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்தார்.

வழக்கமாக காங்கிரஸ் தலைவர்கள் இந்திய தேசிய இராணுவத்தின் பங்களிப்பையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் போராட்டங்களையும் மறைக்கிறார்கள் – மரியாதை தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு.

அதைப் பொய்யாக்கும் வண்ணம் தனது சிங்கப்பூர் வருகையின் ஒரு பகுதியாக இந்திய தேசிய இராணுவத்தின் நினைவுச் சின்னத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி அங்கு மரியாதை செலுத்தினார்.

சிங்கை இந்தியர் சங்கத்திற்கும் ராகுல் காந்தி வருகை

#TamilSchoolmychoice

சிங்கை இந்தியர் சங்கத்திற்கும் ராகுல் காந்தி மார்ச் 7-ஆம் தேதி வருகை தந்தார். பெலஸ்தியர் சாலையில் அமைந்திருக்கும் சிங்கை இந்தியர் சங்கம் 1923-இல் தொடங்கப்பட்டதாகும். இந்த சங்கத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் 1950-இல் அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1950-இல் நேரு சிங்கை இந்தியர் சங்கத்தின் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் புகைப்படம்

துமாசிக் நிறுவனத்துடன் சந்திப்பு

சிங்கை வருகையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி சிங்கையின் அரசு முதலீட்டு நிறுவனமான துமாசிக் நிறுவனத்திற்கு வருகை தந்து அதன் தலைவரும் சிங்கை பிரதமர் லீ சியன் லுங்கின் மனைவியுமான ஹோ சிங்-கையும் சந்தித்தார்.