Home நாடு தொகுதி எல்லை மாற்றங்கள் – இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

தொகுதி எல்லை மாற்றங்கள் – இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

900
0
SHARE
Ad
முகமட் ஹாஷிம் அப்துல்லா – மலேசிய தேர்தல் ஆணையத் தலைவர்

புத்ரா ஜெயா – எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமுல்படுத்துவதற்காக மலேசியத் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தொகுதி எல்லை மாற்றங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மலேசிய அரசியல் சாசனத்தின்படி, தொகுதி எல்லைகளுக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் தனது கடமையைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிவிட்டது என்றும் இனி அந்த அறிக்கையின் சாராம்சங்களை அமுலாக்க வேண்டியதா இல்லையா என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹாஷிம் அப்துல்லா தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாமன்னரின் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மாமன்னர் உரை மீதான விவாதங்கள் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கும் தொகுதி எல்லை மாற்றங்கள் குறித்த சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice