சிங்கப்பூர் – மலேசியா-சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 7-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை சிங்கை பிரதமர் லீ சியன் லுங், துணைப் பிரதமர் தர்மன் சண்முகம் ஆகியோருடன் ராகுல் சந்திப்புகள் நடத்தினார்.

இன்று வெள்ளிக்கிழமையுடன் சிங்கை வருகையை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி கோலாலம்பூருக்கு வருகை தருகிறார். நாளை இங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தியின் சிங்கை வருகையின்போது எடுக்கப்பட்ட படக் காட்சிகள்:


நேற்று வியாழக்கிழமை சிங்கை பல்கலைக் கழகம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திலும் ராகுல் காந்தி உரையாற்றியதோடு, பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
’70-ஆம் ஆண்டில் இந்தியா’ என்ற தலைப்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

படங்கள்: நன்றி: ராகுல் காந்தி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் டுவிட்டர் பக்கங்கள்