Home நாடு கினபாலு மலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது

கினபாலு மலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது

887
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் புகழ் பெற்ற மலையான கினபாலு மலை உலகம் முழுவதிலும் இருந்து மலையேறிகளையும், இயற்கைக் காட்சிகளின் காதலர்களையும் ஈர்க்கும் பிரதேசமாகும். நேற்று வியாழக்கிழமை சபா மாநிலத்தில் ஏற்பட்ட 5.2 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கினபாலு மலை மூடப்பட்டதோடு அங்கிருந்த பொதுமக்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எனினும் நாளை சனிக்கிழமை கினபாலு மலை மக்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. 5.0 புள்ளிகளுக்கும் அதிகமான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளையும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேசியப் பேரிடர் நிர்வாக மையம் அறிவித்திருக்கிறது.

இதற்கு முன்பாக 5.5 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் மட்டுமே அபாய நிலைமை என்றிருந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டு இனி 5.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டாலே அபாய நிலைமை என முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை சபாவிலுள்ள ரானாவ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த வட்டாரத்திலுள்ள கினபாலு மலைப் பகுதியும் பாதிப்புக்குள்ளானது.

உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த மீட்புப் படையினர் 239 பேர்களை மலைச்சரிவுகளில் இருந்து பத்திரமாக மீட்டனர். இவர்களில் 130 மலையேறிகளும் அடங்குவர்.